செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 23 அக்டோபர் 2023 (16:47 IST)

எதற்கெடுத்தாலும் திமுகவை குற்றம் சொல்லும் சிலரை திருத்த முடியாது; அமைச்சர் மனோ தங்கராஜ்

MANO THANGARAJ
எதற்கெடுத்தாலும் திமுகவை குற்றம் சொல்லும் சிலரை திருத்த முடியாது என அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 
நீட் எதிர்ப்பு என்பது திமுகவின் காலம் காலமான நிலைபாடு என்றும், வட இந்தியாவில் மாணவ, மாணவிகள் நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களை புரிந்து கொண்டு சீமான் பேச வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் எல்லோரும் சமத்துவமாக சமமாக வாழ வேண்டும், இறை வழிபாட்டு முறை, சமத்துவத்தை சார்ந்து இருக்க வேண்டும் என்பது தான் திமுகவின் நிலைப்பாடு என்றும், திமுக ஆன்மிகவாதிகளுக்கு எதிரான இயக்கம் என்று கூறுவது அப்பட்டமான பொய் என்றும்  அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
 
Edited by Siva