செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 மே 2022 (18:31 IST)

எங்களை எதிர்த்தா சாலையில் நடமாட முடியாது! – அமைச்சர்களுக்கு மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை!

Mannargudi Jeeyar
தருமபுர ஆதீனம் பட்டண பிரவேச நிகழ்ச்சியில் பல்லக்கு தூக்க தடை விதித்துள்ளது குறித்து மன்னார்குடி ஜீயர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தருமபுர ஆதீனம் பட்டண பிரவேச நிகழ்ச்சி மே 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அன்று ஆதீனத்தை பல்லக்கில் மனிதர்கள் தூக்கி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன.

முன்னதாக இதுகுறித்து மதுரை ஆதீனம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பட்டண பிரவேச நிகழ்ச்சியை நடத்தியே தீருவோம் என பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். இன்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்ட நிலையில் முதல்வர் ஆதீனத்துடன் கலந்து பேசி முடிவை சொல்லுவார் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பட்டண பிரவேச நிகழ்ச்சியில் பல்லக்கு தூக்க அனுமதி மறுத்துள்ளது குறித்து கண்டனம் தெரிவித்து பேசியுள்ள மன்னார்குடி ஜீயர் “இந்து மதத்தை எதிர்தார் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வீதிகளில் நடமாட முடியாது. தருமபுர ஆதீனம் பட்டண பிரவேசத்தை நடத்தியே தீருவோம்” என கூறியுள்ளார்.