வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 22 நவம்பர் 2021 (22:43 IST)

மாணவியை வன்கொடுமை செய்த நபருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை!

பிளஸ் 1 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மகிளா நீதிமன்றம் சாகும்வரை ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த நபர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையத்து அந்த நபரை போலீஸார் கைது செய்தனர். இது குறித்த விசாரணை நடந்து வந்த நிலையில், இன்று மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது.

அதில், மயக்க மருந்து கொடுத்து பிளஸ்1 பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு சாகும் வரை ஆயுள்தண்டனை அளித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.