திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 5 ஆகஸ்ட் 2020 (11:40 IST)

விபத்தில் காலை இழந்த நபர் … ஒற்றைக்காலில் தஞ்சாவூரில் இருந்து மதுரை சைக்கிள் பயணம்!

விபத்து ஒன்றில் தனது ஒற்றைக்காலை இழந்த நபர் ஒருவர் ஒற்றைக்காலோடு தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு சைக்கிளிலேயே சென்ற சம்பவம் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தஞ்சாவூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதான ராஜா விபத்து ஒன்றில் தனது இடதுகாலை இழந்துள்ளார். ஆனால் அது சம்மந்தமான வழக்கில் இன்னும் அவருக்கான இழப்பீடு வழங்கப்படவில்லை. இது சம்மந்தமாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க அவர் முயற்சி செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் தனது வழக்கு சம்மந்தமான ஆவணங்களை தனது வழக்கறிஞரிடம் கொடுப்பதற்காக தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு சைக்கிளிலேயே பயணம் மேற்கொண்டுள்ளார். கொரோனா லாக்டவுன் காரணமாக பேருந்து வசதிகள் இல்லாத நிலையில் ஒற்றைக் காலோடு அவர் சைக்கிள் ஓட்டிச் சென்றது அனைவரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.