திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 13 ஜூலை 2020 (18:12 IST)

ஆபாசப் படம் பார்க்க சொல்லி வற்புறுத்தல்… நடுவீட்டில் நிர்வாணம் – தந்தையைப் பற்றி மகள் சொன்ன அதிர்ச்சி புகார்!

பாண்டிச்சேரியைச் சேர்ந்த பாலிடெக்னிக் படிக்கும் பெண் ஒருவர் தன் தந்தை தனக்கு அளித்த பாலியல் தொல்லைகள் பற்றி போலிஸில் புகார் அளித்துள்ளார்.

பாண்டிச்சேரியை சேர்ந்த அந்த தந்தை மருத்துவமனை ஒன்றில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். சமீபகாலமாக இவரது நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்கள் தெரிந்ததை பார்த்த மனைவி அதிர்ச்சியாகியுள்ளார். எப்போதும் செல்போனில் ஆபாசப் படங்களைப் பார்த்துக் கொண்டே இருந்த அவர், ஒரு கட்டத்தில் தன் கல்லூரி செல்லும் மகள் இருக்கும்போது கூட அதை செய்துள்ளார்.

இது சம்மந்தமாக மனைவி சண்டைப் போட்டும் கூட அவர் மாறவில்லை. மேலும் குளித்துவிட்டு வந்து மகள் இருக்கும்போதே நிர்வாணமாக துணிமாற்றிக் கொண்டுள்ளார். அவரின் இதுமாதிரியான அருவருப்பான செயல்கள் ஒரு கட்டத்தில் மகளையே ஆபாசப்படம் பார்க்க வற்புறுத்தும் அளவுக்கு சென்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒரு நாள் இரவு, மகளின் அருகில் படுத்துக்கொண்டு அவருக்கு பாலியல் தொல்லைக் கொடுக்க இதை தட்டிக்கேட்ட மனைவி மற்றும் மகளைக் கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த அவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட, பின்னர் போலிஸாரிடம் அந்த கொடூர நபரைப் பற்றி புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து போலீஸார் தலைமறைவாக உள்ள அந்த நபரை தேடி வருகின்றனர்.