திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 4 டிசம்பர் 2019 (13:44 IST)

கனரா வங்கிக்குள் புகுந்து மேனேஜரை வெளுத்து வாங்கிய நபர் – எதற்குத் தெரியுமா ?

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சுங்கம் பகுதியில் அமைந்துள்ள கனரா வங்கிக்குள் நுழைந்த மர்மநபர் மேனேஜரை துப்பாக்கி முனையில் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட்த்தில் உள்ள சுங்கம் எனும் இடத்தில் இருக்கும் கனரா வங்கிக்குள் கையில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் மேலாளர் மற்றும் இடைத்தரகர் ஆகியோரை துப்பாக்கி முனையில் தாக்க ஆரம்பித்துள்ளார். இதுபற்றி கேட்ட முதன்மை மேலாளர் சந்திரசேகர் என்பவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து போலிஸாருக்கு சந்திரசேகர் தகவல் தெரிவிக்க அவர்கள் சிசிடிவி காட்சிகளை வைத்து வெற்றிவேல் என்ற அந்த நபரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ‘இடைத்தரகரும் வங்கி மேலாளரும் லோன் வாங்கித் தருவதாக பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டனர். அதனால் ஏற்பட்ட கோபத்தில் அவர்களை தாக்கினேன்’ எனக் கூறியுள்ளார்.