வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 12 ஜூன் 2019 (13:54 IST)

அக்கா மகளுக்கு ஆபாச படம் படம் காட்டிய வாலிபர் ! பகீர் சம்பவம்

சமீபகாலமாக பெண்களுக்கு எதிராக நாள்தோறும் பாலியல் அத்துமீறல், பாலியல் தொல்லைகள் அதிகரித்துகொண்டே வருகிறது, சட்டத்தின் மூலம்  எத்தனை கடுமையாக தண்டனை கொடுத்தாலும் கூட சில வக்கிர புத்தி கொண்டவர்களால் பல பெண்கள், குழந்தைகள் பாதித்த வண்ணமாகவே உள்ளனர். இந்நிலையில் அக்கா முறையுடைய பெண்ணின் 4வயது மகளை 25 வயதுடைய வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்மை : மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்கு அருகில் உள்ள வாடி என்ற நகரைச் சேர்ந்தவர் ஒரு இளம்பெண். இவருக்குச் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி தற்போது 4 வயதில் ஒரு மகள் உள்ளார்.
 
தன் வீட்டுச் சூழ்நிலைக்காக அவர் தனது உறவினர் ஒருவர் வீட்டில் வேலை செய்துவந்தார். அதாவது வார இறுதி நாட்களில் தன் குழந்தையை அந்த  உறவினரின் வீட்டுக்கு அழைத்துச் செல்வது வாடிக்கை.
 
இந்நிலையிம் சம்பவ தினத்தில் வீட்டில் வேலை செய்துவந்த பெண், தன் குழந்தையை வீட்டில் விளையாட விட்டுவிட்டார். ஆனால் அங்கிருந்த உறவினரின் மகன் , (குழந்தைக்கு மாமா முறை, மற்றும் அப்பெண்ணுக்கு தம்பிமுறை) குழந்தைக்கு செல்போனில் ஆபாச படத்தைக் காட்டியிருக்கிறார்.
 
மேலும் இந்தப் படத்தில் உள்ளது போன்று நடப்போம்..என்று கூறி சிறுமியை பாலியல் கொடுமை செய்துள்ளான். பின்னர் குழந்தைக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் , அவளை மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றார் தாய். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு பாலியல் கொடுமை செய்துள்ளதைக் கூறியுள்ளனர். 
 
இதையடுத்து பெண் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதனையடுத்து அந்த இளைஞரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.