1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 21 ஜூன் 2024 (12:23 IST)

நல்ல ப்ளான் பண்ணி நாடகம் போட்டிருக்காங்க! - அதிமுக மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சட்டமன்றத்தில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டது திட்டமிட்ட நாடகம் என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

 

இன்று சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றுய் வந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து விவாதம் நடந்த வேண்டும் என அதிமுகவினர் கோஷமிட்டனர். அதற்கு நேரம் ஒதுக்கப்படும் என சபாநாயகர் கூறியபோதும் அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், அவர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

அதை தொடர்ந்து சட்டமன்றத்திலிருந்து பாமக, பாஜக கட்சிகளும் வெளியேறின. இந்த விவகாரம் குறித்து அதிமுகவினர் ஆளுனரை சந்திக்க உள்ளனர்.

இந்த அமளி குறித்து பேசிய முதல்வர் மு.க,ஸ்டாலின், அதிமுகவினர் திட்டமிட்டு இந்த நாடகத்தை நடத்தியுள்ளதாகவும், பேசுவதற்கு நேரம் அளிப்பதாக கூறியும் அவர்கள் இவ்வாறு செய்ததாகவும் விமர்சித்துள்ளார். மேலும் சட்டமன்ற பேரவை ஜனநாயக முறையில் நடைபெற வேண்டும் என தான் விரும்புவதாக கூறியுள்ள அவர் எதிர்கட்சிகள் பங்கேற்க சபாநாயகர் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கையும் வைத்தார். அதன்படி சபாநாயகர் அப்பாவு எதிர்கட்சியினரை உள்ளே அனுமதித்த போதும், அதை மறுத்து அவர்கள் வெளியேறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.k