வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 6 நவம்பர் 2024 (11:02 IST)

சென்னை அருகே தண்டவாளத்தில் சிமெண்ட் கல்: ரயிலை கவிழ்க்க சதியா?

Train Track
சென்னை அருகே தண்டவாளத்தின் மீது மிகப்பெரிய சிமெண்ட் கல் இருந்த நிலையில் ரயில் டிரைவர் சுதாரித்து உடனடியாக நிறுத்தியதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மங்களூருக்குப் புறப்பட்ட விரைவு ரயில் நேற்று இரவு, அம்பத்தூர் ரயில் நிலையத்தைத் தாண்டி திருமுல்லைவாயல் அருகே சென்றுகொண்டிருந்தபோது, தண்டவாளத்தில் ஒரு மிகப்பெரிய கட்டிட கழிவு வைக்கப்பட்டிருப்பதை கண்டதும் ஓட்டுனர் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்து, ரயிலை நிறுத்தினார். தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த சிமெண்ட் கல் சுமார் 3 கிலோ எடை கொண்டது. இதையடுத்து ரயில்வே காவல்துறை அதிகாரிகள் அந்த சிமெண்ட் கல்லை அகற்றினர்.

 இந்த விவகாரம் குறித்து ஆவடி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, தண்டவாளத்தில் சிமெண்ட் கல் வைத்தவர்களை தேடி வருகின்றனர். இது ரயிலை கவிழ்க்க சதித்திட்டமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


Edited by Mahendran