வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 3 ஜூன் 2021 (12:55 IST)

கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய மகேந்திரன்… திமுகவுக்கு வருவது உறுதியா?

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மருத்துவர் மகேந்திரன் திமுக வில் சேர வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது.

சமீபத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் காட்சியிலிருந்து அக்கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் அவர்கள் விலகினார் என்பது தெரிந்தது. மகேந்திரன் விலகலுக்கு பின் கமலஹாசன் காரசாரமான ஒரு அறிக்கை விட்டார் என்பதும் அதற்கு பதிலளிக்கும் வகையில் பல தொலைக்காட்சிகளில் டாக்டர் மகேந்திரன் பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் திமுகவில் சேர்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இன்று மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கலைஞரின் 98 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தன்னுடைய முகநூல் பக்கத்தில் ‘சுயமரியாதை இயக்கத்தையு, சமூக நீதியையும், திடாவிட சித்தாந்தத்தையும் தம் சொல்லால், செயலால் எழுத்தால் உலகறியச் செய்தவர்; திருக்குவளை ஈன்றெடுத்த திராவிட சூரியன், 5 முறை தமிழகத்தை ஆண்ட், ஐயா திரு கலைஞர் அவர்களின் பிறப்பு ஒரு சரித்திரம்’ எனக் கூறி வாழ்த்தியுள்ளார். இதன் மூலம் அவர் திமுக வருவது உறுதி என்று பலரும் கருத ஆரம்பித்துள்ளனர்.