ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2000: அதிர்ச்சியில் பொதுமக்கள்!
ஒரு கிலோ மல்லிகை பூ ரூபாய் 2000 ரூபாய்க்கு விற்பனை ஆவதாக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் இன்று மல்லிகை பூ கிலோ ரூபாய் 2000 ரூபாய்க்கு விற்பனையானது. வழக்கமாக மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு தினமும் 6 டன் மல்லிகை வரும் நிலையில் மழை காரணமாக இன்று ஒரு டன் மட்டுமே வந்ததாக கூறப்படுகிறது
இதனால் மல்லிகை விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ 600 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை இன்று ஆயிரத்து 400 ரூபாய்க்கு தொடங்கி 2000 ரூபாய் ஆக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கந்தசஷ்டி மற்றும் தீபாவளி காரணமாக மலர்களின் தேவை அதிகரித்திருப்பதால் மலர்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்