செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 18 நவம்பர் 2022 (14:25 IST)

கலை தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது: மதுரை ஐகோர்ட் கண்டனம்

Madurai
கலை தெரியாதவர்களுக்கு எல்லாம் கலைமாமணி விருது வழங்கப்படுவதாக மதுரை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது
 
தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளை திரும்ப பெற உத்தரவிடக் கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்த வழக்கின் விசாரணையில் மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் அதிரடி கேள்விகள் எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இரண்டு படங்கள் நடித்து விட்டால் அவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கலாம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது என்றும் எதன் அடிப்படையில் விருது வழங்கப்படுகிறது? எவ்வாறு விருது பெறும் நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது குறித்து பதிலளிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது 
 
கலை தெரியாதவர்களுக்கு எல்லாம் கலைமாமணி என்ற நிலை ஏற்படக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran