மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை தேர்விலும் ஆள்மாறாட்டம்: இளைஞர் கைது
மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மத்திய பிரதேச இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை மையத்தில் வீரர்களுக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் கலந்துகொண்டவரும், உடல் தகுதி தேர்வில் பங்கேற்றவரும் வெவ்வேறு நபர்கள் என்பது பயோமெட்ரிக் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து உடல் தகுதி தேர்வில் கலந்துகொள்ள வந்த கரண்சிங் ரத்தோரை ஆவடி டேங்க் ஃபேக்டரி காவல் நிலையத்தில் சி.ஆர்.பி.எஃப். அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதுகுறித்த முதல்கட்ட விசாரணையில் சென்னை திருவொற்றியூரில் தங்கியுள்ள கரண் சிங் ரத்தோர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
2023ஆம் ஆண்டு நடந்த எழுத்துத்தேர்வை தொடர்ந்து நேற்று நடந்த உடல்தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ஏற்கனவே நீட் தேர்வில் ஒரு சிலர் ஆள்மாறாட்டம் உள்பட சில மோசடிகளை செய்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை தேர்விலும் ஆள்மாறாட்டம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Edited by Siva