1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 9 மே 2016 (06:20 IST)

அம்மாவிடம் ஆசி வாங்கிய மு.க.ஸ்டாலின்

அம்மாவிடம் ஆசி வாங்கிய மு.க.ஸ்டாலின்

அன்னையர் தினத்தை முன்னிட்டு, தனது தாயார் தயாளு அம்மாளிடம் நேரில் சென்று ஆசி பெற்றார் திமுக பொருளார் மு.க.ஸ்டாலின்
 

 
இது குறித்து, அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
 
தன்னலம் கருதாத உள்ளம் என்பதுதான் தாயுள்ளம். அந்தத் தாய் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஆதாரமாக இருக்கிறார். தற்காத்து தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் என்று தாய்மையின் பெருமையை உரைக்கிறார் திருவள்ளுவர். அப்படிப்பட்ட பெருமை கொண்ட அன்னையர் அனைவருக்கும் இந்த அன்னையர் தினத்தில் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன்.
 
தாய்மார்களின் நலனுக்காக-பெண்களின் முன்னேற்றத்துக்காக மகளிர் சுயஉதவிக்குழுக்கள் முதல், பெண்களுக்கு சொத்துரிமை உள்பட பல முற்போக்குத் திட்டங்களைக் கொண்டு வந்தது கலைஞர் தலைமையிலான கழக அரசு. அந்த நற்காலம் விரைவில் மீண்டும் வரும்.
 
அன்னையர் வாழ்வில் பொற்காலமாக அமையும். தன்னலம் கருதாத உள்ளம் என்பதுதான் தாயுள்ளம். அந்தத் தாய் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஆதாரமாக இருக்கிறார். தற்காத்து தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் என்று தாய்மையின் பெருமையை உரைக்கிறார் திருவள்ளுவர். அப்படிப்பட்ட பெருமை கொண்ட அன்னையர் அனைவருக்கும் இந்த அன்னையர் தினத்தில் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன்.
 
தாய்மார்களின் நலனுக்காக-பெண்களின் முன்னேற்றத்துக்காக மகளிர் சுயஉதவிக்குழுக்கள் முதல், பெண்களுக்கு சொத்துரிமை உள்பட பல முற்போக்குத் திட்டங்களைக் கொண்டு வந்தது கலைஞர் தலைமையிலான கழக அரசு. அந்த நற்காலம் விரைவில் மீண்டும் வரும். அன்னையர் வாழ்வில் பொற்காலமாக அமையும் என தெரிவித்துள்ளார்.