கல்லூரிகளுக்கு ஜனவரி வரை விடுமுறை..
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை முதல் ஜனவரி 1 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் கிறுஸ்துமஸ் , புத்தாண்டு ஆகிய தினங்களும் வருவதால், இதனையொட்டி தமிழகத்தின் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களுக்கு நாளை முதல் ஜனவரி 1 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் விடுமுறை காரணமாக நாளை தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்த அண்ணா பல்கலகழக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.