ஊரக உள்ளாட்சி தேர்தல்; நாளை வாக்கு எண்ணிக்கை என்பதால் பலத்த பாதுகாப்பு!
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன என அறிவிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முழுவதும் சிசிடிவி காட்சி மூலம் பதிவு செய்யப்படுகிறது என்றும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரண்டு கட்டங்களாக பதிவான வாக்குகள் 74 மையங்களில் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் வாக்கு எண்ணும் பணியில் உள்ள அதிகாரிகள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்களை தவிர பொதுமக்களுக்கு வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதி இல்லை என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.