ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 17 ஜனவரி 2019 (11:11 IST)

ரெக்கார்டை தகர்த்த மது விற்பனை: பொங்கல் கலெக்‌ஷன் இத்தனை கோடிகளா?

தமிழகத்தில் பொங்கலையொட்டி 303 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது, டாஸ்மாக்கில் விற்பனை எகிறும். எனவே, ஒவ்வொரு வருடமும் அரசு இலக்கு வைத்து மது விற்பனையை நடத்தி வருகிறது.
 
இந்நிலையில் இந்த பொங்கலுக்கு 303 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போகி பண்டிகையின் போது ரூ.148 கோடிக்கும், பொங்கலன்று ரூ.155 கோடிக்கும் மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.
 
2018ஆம் ஆண்டு இவ்விரு நாட்களில் 220 கோடிக்கு மது விற்பனை ஆகியது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டை விட 83 கோடி ரூபாயை சேர்த்து அள்ளியுள்ளது அரசு.