1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 12 டிசம்பர் 2022 (16:54 IST)

மக்கள் அழைத்தால் அரசியலுக்கு வருவேன்: லெஜண்ட் சரவணன்!

Legend Saravanan
மக்களும் மகேசனும் அழைத்தால் அரசியலுக்கு வருவேன் என தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் அவர்கள் இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
 
 சென்னை சரவணா ஸ்டோர் தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் இன்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது தனது அடுத்த படத்தின் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இயக்குனர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவது தற்போது டிரண்ட் ஆகியுள்ள நிலையில் தான் அரசியலுக்கு வர வேண்டுமா வேண்டாமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்து கொண்டார். அவருடைய இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Edited by Siva