1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 18 ஜூன் 2019 (20:55 IST)

காதலை விட்டு விடு ! காதலி விஷம் குடித்தார்...காதலன் ரயில் முன் பாய்ந்தார் : திடுக் சம்பவம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள செருகுடி என்ற கிராமத்தில் வசிப்பவர் சுப்பிரமணியன். இவரது மனைவி விஜயா. இந்த தம்பதியினரின் மகன் நவீன்ராஜா(23). பாலிடெக்னிக் படித்துவிட்டு வேலை தேடிவந்துள்ளார்.
நவீன்ராஜும்,  தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள முனியூர் கிராமத்தை சேர்ந்த தமிழ்பிரிவியாவும் (21) கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்துவந்தனர்.
 
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் நவீனின் தந்தை சுப்பிரமணியன் உயிரிழந்தார். இதனால் குடும்பத்தின் சூழநிலை கருதி தாய் விஜயா காதல் வேண்டாம் என்று நவீனிடம் கூறியுள்ளார்.
 
இதை நவீன் தன் காதலி தமிழ்பிரியாவிடம் நீ வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்ளும்படி கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த தமிழ்பிரியா சில தினங்களுக்கு முன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார். வீட்டார் அவரை மருத்துவனையில் சேர்த்துள்ளனர்.
 
ஏற்கனவே தந்தையை இழந்துள்ள நவீன் தற்போது காதலியும் விஷம் குடித்ததால் பெரும் கவலைஅடைந்து நேற்றுக்கு முந்தினம் நன்னிலம் அருகே ரயில்வே நிலையத்திற் வந்து பிளாட்பாரம் இருக்கையில் அமர்ந்ததாகத் தெரிகிறது.பின்னர்  சிறிது நேரம் அழுதுவிட்டு அங்கே வந்த ரயில் முன்  பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.