1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 13 ஜூன் 2023 (08:02 IST)

அண்ணாமலை உண்மை மட்டுமே பேசுவார்.. ஜெயலலிதா ஊழல்வாதி என்ற கேள்விக்கு குஷ்பு பதில்..!

ஜெயலலிதாவை ஊழல்வாதி என்று அண்ணாமலை பேசியது குறித்து கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு அண்ணாமலை எப்போதும் உண்மையைத் தான் பேசுவார் என்று தெரிவித்தார். 
 
ஜெயலலிதா ஊழல்வாதி என்றும் ஊழலுக்காக தண்டனை பெற்றவர் என்றும் சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது பேச்சுக்கு அதிமுகவின் ஜெயக்குமார், அமமுகவின் டிடிவி தினகரன் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர் 
 
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக பிரமுகர் குஷ்புவிடம் ஜெயலலிதாவை ஊழல்வாதி என்று அண்ணாமலை பேசியது குறித்து கேட்டபோது அண்ணாமலை எப்போதும் உண்மையைத் தான் பேசுவார் என்றும் சட்டப்படிதான் பேசுவார் என்றும் சட்டப்படி என்ன நடந்ததோ அதைத்தான் பேசுவார் என்றும் தெரிவித்தார். அவரது பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மேலும் இதன் காரணமாக அதிமுகவுடன் ஆன கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று அமித்ஷா கூறிவிட்டார் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva