வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 12 ஜூன் 2019 (09:40 IST)

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் குன்னம் எம்எல்ஏ மிஸ்ஸிங்: என்ன ஆச்சு?

மக்களவை தேர்தல் தோல்விக்கு பின் அதிமுகவில் உறுதியான முடிவுகள் எடுக்க ஒற்றைத்தலைமை தேவை என்ற குரலை முதல்முதலில் கிளப்பியவர் குன்னம் எம்.எல்.ஏ ஆர்.டி.ராமச்சந்திரன். இவருடைய கருத்தை பலர் எதிர்த்தாலும் ஒருசில எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்ததால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது
 
இந்த நிலையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
 
இந்த நிலையில் சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் குன்னம் எம்எல்ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளிவந்துள்ளது. குன்னம் ராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் கேரளா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அவரது தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒற்றைத்தலைமை குறித்த சர்ச்சையை எழுப்பிய குன்னம் எம்.எல்.ஏ இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது