1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 28 மே 2023 (09:21 IST)

பொய்ச்செய்தி போடுபவர்கள், நல்ல புகைப்படத்தையும் போடுங்கள்: கிருத்திகா உதயநிதி

பொய்ச் செய்தி போடுபவர்கள் ஒரு நல்ல புகைப்படத்தையும் போடுங்கள் என கிருத்திகா உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலுடன் கூடிய பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமலாக்கத்துறை சமீபத்தில் முன்னணி நிறுவனங்களில் நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்களை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான அறக்கட்டளை ஒன்றில் வங்கி கணக்கை முடக்கி உள்ளதாகவும் அந்த அறக்கட்டளைக்கு சொந்தமான அசையா சொத்துக்களையும் முடக்கி உள்ளதாகவும் கூறப்பட்டது.
 
 உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளை என அமலாக்க துறையின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்ததை பலர் உதயநிதி ஸ்டாலின் மனைவிக்கு சொந்தமான அறக்கட்டளை மற்றும் வங்கி கணக்கு என தவறாக புரிந்து கொண்டு பொய் செய்திகளை பதிவு செய்து வருகின்றனர். 
 
இது குறித்து கிருத்திகா உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் என்னைப் பற்றி தவறான தகவல் மற்றும் போலி செய்திகளை பரப்புபவர்கள் குறைந்தபட்சம் ஒரு நல்ல புகைப்படத்தை பயன்படுத்துங்கள் என்று நக்கலுடன் ட்வீட் செய்து உள்ளார்.
 
Edited by Siva