கோவையில் கொடூரமான தற்கொலை முயற்சி! – போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்!
கோவையில் நூதனமான முறையில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
உலகம் முழுவதும் பல தற்கொலை சம்பவங்கள் நடந்து வந்தாலும் நூதனமான முறையில் சிலர் தற்கொலை செய்து கொள்வது பொதுவெளியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவிடுகிறது. கோவையை சேர்ந்த பெண் ஒருவர் இவ்வாறாக தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அந்த பெண் நூல் தைக்கும் ஊசியை கழுத்தில் குத்தி தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். அவரை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனை கொண்டு வந்துள்ளனர். தொண்டையில் பாய்ந்த ஊசியை கோவை மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு அகற்றியு, பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.