திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 8 மே 2020 (10:25 IST)

முதலிடத்தை பிடித்த கோடம்பாக்கம்: மண்டலவாரியாக சென்னை கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சென்னையில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ராயபுரத்தில் மிக அதிகமான பாதிப்புகள் இருந்த நிலையில் தற்போது ராயபுரத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு கோடம்பாக்கம் மற்றும் திருவிக நகர் முன்னேறி உள்ளது என்பது வருத்தத்துக்குரிய செய்தியாக உள்ளது 
 
சென்னையில் மொத்தம் 2644 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளாகியுள்ள நிலையில் அதில் கோடம்பாக்கத்தில் மற்றும் 467 பேர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கோடம்பாக்கம் கொரோனா பாதிப்பில் சென்னையில் முதல் இடத்தில் உள்ளது 
 
கோடம்பாக்கத்தை அடுத்து திருவிக நகரில் 448 பேர்களும், ராயபுரத்தில் 422 பேர் பேர்களும், தேனாம்பேட்டையில் 316 பேர்களும் அண்ணாநகரில் 206 பேர்களும் தண்டையார்பேட்டையில் 184 பேர்களும், அடையாறு பகுதியில் 107 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மிகவும் குறைந்தபட்சமாக மணலில் 14 பேர்களும் சோழிங்கநல்லூரில் 15 பெயர்களும் ஆலந்தூரில் 16 பேர்களும் கொரோனவால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள கோடம்பாக்கம், ராயபுரம் திருவிக நகர் மற்றும் தேனாம்பேட்டையில் கூடுதல் கவனம் செலுத்தி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்