தடுப்பூசி போடலைனா இந்த பக்கமே வரக்கூடாது! – கறார் காட்டும் கொடைக்கானல்!
தடுப்பூசி போடாதவர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா வர கொடைக்கானலில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமலே வெளியூர் பயணங்கள் மேற்கொண்டு வருவதும் தொடர்கிறது.
இதனிடையே கொரோனா கட்டுப்பாடு தளர்வுகள் காரணமாக கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு அனுமதியில்லை என கொடைக்கானல் சுற்றுலா துறை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும் என்று கண்டிப்பாக கூறப்பட்டுள்ளதால் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.