1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2024 (10:29 IST)

தனது 12 வயது மகளை வட கொரிய அதிபராக்க போகும் கிம் ஜாங் அன்? - ஏன் தெரியுமா?

Kim Ju ae

வடகொரியாவின் அதிபராக விளங்கி வரும் கிம் ஜாங் அன், நாட்டின் அடுத்த அதிபராக தனது 12 வயது மகளை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

வடகொரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதலாக அதிபராக இருந்து வருபவர் கிம் ஜாங் அன். கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக கிம் ஜாங் அன் ஆட்சி நடந்து வரும் நிலையில் அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனை என பலவற்றை நடத்தி தொடர்ந்து அருகில் உள்ள தென்கொரியா, ஜப்பான் நாடுகளை அச்சுறுத்தி வருகிறது வட கொரியா. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்தபோதும் அதை புறம் தள்ளிவிட்டு தொடர்ந்து இதுபோன்ற செயல்பாடுகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது.

 

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கிம் ஜாங் அன் வெளியே நடமாடுவதே குறைந்திருந்தது. கடந்த 2022ம் ஆண்டில் கிம் ஜாங் அன் அரசு நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ளாத நிலையில், அவர் இறந்துவிட்டதாகவும், அவரது சகோதரிதான் அனைத்தையும் நிர்வாகம் செய்து வருவதாகவும் கூட தகவல் பரவியது.

 

ஆனால் சில மாதங்கள் கழித்து கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்று யூகங்களை உடைத்தார் கிம் ஜாங் அன். ஆனால் அவர் உடல்நிலையில் ஏதோ கோளாறு உள்ளது என்றும், அதனால்தான் எப்போதாவது மட்டும் வெளியே தலைகாட்டுகிறார் என்றும் கூறப்படுகிறது. இதனால் வடகொரியாவுக்க்கான அடுத்த அதிபரை தயார் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளாராம் கிம்.

 

அது வேறு யாருமல்ல. கிம் ஜாங் அன்னின் 12 வயது மகள் கிம் ஜூ ஏ தான். சமீப காலமாக தனது அரசுமுறை சந்திப்புகள், பயணங்கள் அனைத்திலும் தனது ஆசை மகள் கிம் ஜூ ஏவை அழைத்து செல்கிறாராம் கிம் ஜாங் அன். அவருக்கு நாட்டு நிர்வாகத்தை சொல்லித்தரும் பொருட்டு கிம் ஜாங் அன் இவ்வாறு உடன் அழைத்து சென்று வருவதாகவும், ஜூ ஏவுக்கு 15 வயதுக்கு மேல் ஆனதும் அவரை அதிபராக அறிவிக்க கிம் திட்டமிட்டுள்ளதாகவும் தென்கொரிய உளவுத்துறை கண்டறிந்து தென்கொரிய அரசுக்கு தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K