திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 ஜனவரி 2021 (13:43 IST)

அன்னைக்கு அந்த சம்பவத்தாலதான் இப்படி மாறுனேன்! – விளக்கம் சொன்ன குஷ்பூ!

தான் கடவுள் மறுப்பாளராக மாறியதற்கு குறிப்பிட்ட கோர சம்பவமே காரணம் என கூறியுள்ள குஷ்பூ அந்த வார்த்தையை வெகுகாலம் முன்னரே நீக்கி விட்டதாகவும் கூறியுள்ளார்.

சமீபத்தில் காங்கிரஸில் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் கட்சியிலிருந்து விலகிய குஷ்பூ பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்தாலும் தான் பெரியாரிய கொள்கைகளை தீவிரமாக பின்பற்றுவதாக கூறி வரும் குஷ்பூ மத நம்பிக்கை சார்ந்த விஷயங்களையும் பேசி வருகிறார்.

குஷ்பூவின் இந்த இரட்டை தன்மை குறித்து பலரும் விமர்சனங்களை முன்வைத்த நிலையில் அதுகுறித்து குஷ்பூ பதில் அளித்துள்ளார். அதில் அவர் தான் பிறந்தது முதலே கடவுள் நம்பிக்கை உள்ள பெண்ணாகவே இருந்ததாகவும், கும்பகோணம் தீ விபத்தில் குழந்தைகள் இறந்த சம்பவம் ஏற்படுத்திய பாதிப்பினால் கடவுள் நம்பிக்கையை கைவிட்டதாகவும் கூறியுள்ளார்.

எனினும் தான் கடவுள் மறுப்பாளர் என்ற வாக்கியத்தை காங்கிரஸில் இருந்த காலத்திலேயே தான் நீக்கிவிட்டதாகவும், தான் புதிதாக மாறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.