1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 31 மே 2020 (07:25 IST)

கொரோனாவுக்கு பலியான குஷ்பு உறவினர்: திரையுலகினர் அதிர்ச்சி

இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில் தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அம்மாநிலத்தில் பலி எண்ணிக்கையும் தினந்தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் அம்மாநிலத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் மும்பையில் உள்ள நடிகை குஷ்புவின் நெருங்கிய உறவினர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக குஷ்பு தனது டுவிட்டரில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். குஷ்புவின் இந்த டுவீட்டுக்கு டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, பிக் பாஸ் போட்டியாளர் காஜல் பசுபதி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர் மேலும் ரசிகர்களும் பலர் அவருக்கு ஆறுதல் கூறி உள்ளனர். குஷ்புவின் நெருங்கிய உறவினரே கொரோனாவுக்கு பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த நிலையில் மும்பை மாநகராட்சி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்து வருவதாகவும் இதன் காரணமாக வரும் நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது