திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 ஜூன் 2023 (11:48 IST)

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை: காவேரி மருத்துவமனை அறிக்கை..!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடப்பது தொடர்பான பரிசோதனை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக காவேரி மருத்துவமனை சற்றுமுன் அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவருக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை குறித்து மருத்துவர்கள் குழு ஆலோசனை செய்தது. 
 
இந்த நிலையில் சற்று முன் காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக பரிசோதனை நடைபெற்றது என்றும் விரைவில் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 
 
மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கண்காணிப்பில் உள்ளார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran