திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (21:06 IST)

கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்.... உலக தாய்ப்பால் வார விழா

karur
புன்னம் சத்திரம் அருகே செயல்படும் கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று முன்தினம்  உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி விழா கொண்டாடப்பட்டது...
 
இவ்விழாவினை  கல்லூரி தலைவர் திருமதி ராஜேஸ்வரி கதிர்வேல் அவர்கள் தொடங்கி வைத்தார் கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர் பிரீத்தி கவுதமன் அவர்கள் முன்னிலை வகித்தார் கல்லூரி முதல்வர் முனைவர் மு மனோ சாமுவேல் ஐயா அவர்கள் தலைமை வகித்தார்... 
 
இவ்விழாவிற்கு  கௌசல்யா அருண்குமார் (சான்றிதழ் பெற்ற தாய்பால் ஆலோசகர் மற்றும் ஆதினி தாய்ப்பால் தான நிறுவனர்..) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு .. தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்தும், நன்மைகள் குறித்தும் மாணவிகளிடையே கலந்துரையாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்...
 
 இந்நிகழ்வில் 300- க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்....