கரூர் வழியாக சென்ற முதல்வர் பழனிச்சாமி : அசத்தலான வரவேற்பு அளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கரூர் வழியாக சேலம் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரவேற்பு அளித்தார்.
மதுரையிலிருந்து சேலத்திற்கு கரூர் வழியாக சென்ற தமிழக முதல்வரும், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில், மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும், கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து முதல்வருக்கு மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.