1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By கே.என்.வடிவேல்
Last Updated : புதன், 27 ஏப்ரல் 2016 (05:49 IST)

கரூர் எஸ்.பி. தற்கொலை முயற்சி - தீயாக பரவிய வதந்தீ

கரூர் எஸ்.பி. தற்கொலை முயற்சி - தீயாக பரவிய வதந்தீ

கரூர் மாவட்டத்தில் அதிமுக பிரமுகர் அன்புநாதன் வீட்டில் ரைடு நடத்திய, கரூர் எஸ்.பி. வந்திதா பாண்டேவை கொலை செய்து கொள்ள முயன்றதாக வதந்தீ பரவி வருகிறது.
 

 
தமிழக சட்டசபைத் தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தது.
 
இந்த நிலையில், கரூர் மாவட்டம், அய்யம்பாளையத்தில்  அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பினாமிகளில் ஒருவரான அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கு சொந்தமான குடோன் மற்றும் வீட்டில், கடந்த, 22 ஆம் தேதி, கணக்கில் வராத ரூ. 4.87 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், பணம் எண்ணும் கருவி, அம்புலன்ஸ் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
 
இந்த ரெய்டை முன்னின்று நடத்தியவர் கரூர் எஸ்.பி. வந்திதா பாண்டே ஆகும். இந்த நிலையில், கரூர் எஸ்.பி. வந்திதா பாண்டேவை கொலை செய்ய முயற்சி செய்து கொண்டதாக வதந்தீ பரவி வருகிறது. ஆனால், தான் நலமாக உள்ளதாக கரூர் எஸ்பி தெரிவித்துள்ளார். வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இது சிலர் திட்டமிட்டு பரப்பும் வதந்தீயாகும். இதன் மூலம் கரூர் எஸ்பி உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்