நான் எந்த தவறும் செய்யவில்லை..! – கடிதம் எழுதிய கணித ஆசிரியர் தற்கொலை!
கரூர் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அதே பள்ளியை சேர்ந்த கணித ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் பள்ளி ஆசிரியர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி படித்த பள்ளியில் பணி புரிந்த கணித ஆசிரியர் தற்போது தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் சரவணன் எழுதிய கடிதம் போலீஸாருக்கு கிடைத்துள்ளது.
அதில் தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், ஆனால் மாணவர்கள் தன்னை தவறாக பார்ப்பதாகவும் கூறியுள்ள அவர், மாணவர்களை கண்டித்ததற்கும், கடுமையாக நடந்து கொண்டதற்கும் வருந்துவதாக கூறி மன்னிப்பும் கேட்டுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.