ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 4 நவம்பர் 2016 (15:51 IST)

வரைவாளரை சுழற்றி அடித்த அதிகாரியால் தர்ணா போராட்டம்: கரூரில் பரபரப்பு

வரைவாளரை சுழற்றி அடித்த அதிகாரியால் தர்ணா போராட்டம்: கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா அலுவலகத்தில் வரைவாளராகப் பணிபுரிந்து வந்த ரமேஷ் ஏற்கனவே கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நில அளவைப்பதிவேடுகள் துறையின் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், இரண்டு வருடங்களாக டெப்டேஷன் எனப்படும் பணியிடைமாற்றத்தின் மூலம் கடவூர் தாலுக்கா அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.


 

 
இந்நிலையில் நேற்று (03-11-16)  காலை அவரை டெப்டேஷனிலிருந்து ரிலீவ் செய்வதாக கூறி ஆணையினை வட்டாட்சியர் முருகன் என்பவர் அளிக்க, அதை பெற்றுக் கொண்டு வந்த ரமேஷ் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நில அளவைப்பதிவேடுகள் துறையில் தனக்கு எங்கு வேலை என்று கேட்டுள்ளார்..
 
’உனக்கு வேலை இங்கு இல்லை’ என்று மெத்தன போக்கில் பதில் அளித்த அதன் உதவி இயக்குநர் வே.மாதப்பன், தேர்தல் நடத்தை விதிகள் கரூர் மாவட்டத்தில் அமலில் இருக்கும் போது எப்படி உங்களுக்கு மாறுதல் அளிக்கலாம் என்று கூறி காலை முதல் இரவு வரை அவரை வெளியேவே நிறுத்தி வைத்துள்ளார். 
 
ஆனால் இதை அறிந்த தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் பாரதிதாசன், மாவட்ட செயலாளர் அன்பழகன், மற்றும் நிர்வாகி இந்திரமூர்த்தி உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் நள்ளிரவு வரை எப்படி ஒரு அரசு அலுவலரை இப்படி இன்னல்கள் செய்யலாம் என்று கூறி தரையில் அமர்ந்து தீடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நீடித்தது. 
 
சுமார் 11 மணி வரை நீடித்த இந்த முற்றுகைப் போராட்டத்தை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை ரமேஷ் அங்கேயே பணியாற்றலாம் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய நிர்வாகிகள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலைந்து சென்றனர். 
 
இந்த சம்பவத்தினால் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 8 மணி நேரம் பரபரப்பு நீடித்தது. மேலும் தேர்தல் ஆணையத்தின் கீழ் பணியாற்றும் வருவாய் துறையில் கீழ் வரும் ஒரு வட்டாட்சியருக்கே, தேர்தல் நடத்தை விதிகள் தெரியாத சம்பவம் இப்பகுதி அரசு அதிகாரிகளிடம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்