1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 21 நவம்பர் 2016 (18:07 IST)

எம்ஜிஆர் மீது செருப்பை வீச செய்தவர் தான் கருணாநிதி: விஜயகாந்த் திடீர் தாக்கு

எம்.ஜி.ஆர் சட்டசபையில் பேசியபோது, சட்டசபை மாடியில் இருந்த பலகுரல் மன்னன் சிவகங்கை சேதுராமன் அவர்கள் மூலமாக எம்ஜிஆர் மீது செருப்பை வீசினார், இப்படிப்பட்டவர்தான் கலைஞர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.


 

இது குறித்து விஜயகாந்த் திமுகவை பேரறிஞர் அண்ணா அவர்களால் கட்சி துவங்கிய போது திமுகவில் எங்கு இருந்தார் என்று தெரியாத நிலையில் இருந்த கலைஞர், பின்னர் திமுகவை தன்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து கட்சியில் தலைவராக வேண்டுமென்று, பல முன்னணி திமுக தலைவர்களை பின்னுக்கு தள்ளி கட்சி தலைவர் ஆனார்.

நாளடைவில் திமுக கலைஞரின் குடும்ப கட்சி ஆனது. கலைஞர் தலைவர் என்கின்ற நிலையில் இருந்ததால், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை இழிவாக பேசினார். இதே விவாதத்தை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சட்டசபையில் பேசியபோது, சட்டசபை மாடியில் இருந்த பலகுரல் மன்னன் சிவகங்கை சேதுராமன் அவர்கள் மூலமாக எம்ஜிஆர் மீது செருப்பை வீசினார், இப்படிப்பட்டவர்தான் கலைஞர்.

இவருடைய மகனான ஸ்டாலின் எப்படிப்பட்டவர் என்பதை அறிய கலைஞருக்கு பிறகு திமுக தலைவராக வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்டாலின் இருக்க, தனக்கு இடையூறாக இருப்பாரோ என்ற அய்யப்பாட்டில், தன் அண்ணன் என்று பாராமல் கட்சியை விட்டு செல்லும் அளவுக்கு உட்கட்சி பூசல் மற்றும் குடும்ப கலவரம் நடத்தியதை தமிழக மக்கள் நன்கு அறிவர்.

நம் நாடு ஜனநாயக நாடு ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை உண்டு, கட்சிக்குள் தலைவர்களையும், மற்ற நிர்வாகிகளை தேர்வு செய்யும் அதிகாரம் கட்சி உறுப்பினர்களுக்குரிய ஜனநாயக உரிமை. திமுகவில் கலைஞருக்கு பிறகு அவர் மகன்கள், மகள்களில் ஒருவரை திமுக தலைவர் பதவியை வகிக்க வியூகம் வகுக்கும் கலைஞர் அவர்களே, திமுக ஜனநாயக கட்சியா?.

திமுகவில் ஸ்டாலினை புகழ்ந்தவர்கள் தான் இன்று அக்கட்சியில் உயர் பதவியில் உள்ளார்கள். ஏற்கனவே மூத்த திமுக தலைவர்கள் கட்சியில் ஓரம் கட்டப்படுள்ளதை மக்கள் அறிவர்.

தனக்கு பின்னால் திமுக தொண்டர்கள் இல்லாத நிலையை உணர்ந்து, தன்பின்னால் கூட்டம் சேர்க்க மாற்று கட்சியினரை அனைத்து சக்திகளையும் உபயோகித்து கட்சியில் முதன்மை இடத்தில் வைத்திருப்பேன் என்று ஆசை வார்த்தைகளை கூறி சேர்த்து வருகிறார். இதுவா கட்சியை வளர்க்கும் நிலை?

கட்சியை வளர்க்க மாற்று கட்சியினரை அழைத்து வந்து பொதுக்கூட்டத்தை கூட்டி திமுகவில் சேர்ப்பது முறையா?. இவர் செயல் மக்களிடத்திலே திமுக தலைவர் என்கின்ற பிரமையை ஏற்படுத்துகிறார். தற்போது திமுகவில் தலைவர் கருணாநிதியா? அல்லது ஸ்டாலினா?” என்று தெரிவித்துள்ளார்.