1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 10 பிப்ரவரி 2021 (21:15 IST)

நீ என்ன பேசுற என்று எனக்கு புரியவில்லை: மக்களவையில் கார்த்திக் சிதம்பரம் ஆவேசம்!

மக்களவையில் கார்த்திக் சிதம்பரம் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு சிலர் கூச்சல் குழப்பம் போட்டு ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்தபோது ’நீ என்ன பேசுற என்று எனக்கு புரியவில்லை’ என கூலாக சொல்லிவிட்டு தனது பேச்சைத் தொடர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
குடியரசுத் தலைவர் உரை மீது சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம் இன்று மக்களவையில் பேசினார். அப்போது விவசாயிகள் பிரச்சினை குறித்து குடியரசுத் தலைவர் உரையில் எந்தவித குறிப்பும் இல்லை என்றும் பாப் பாடகியின் டுவிட்டருக்கு பதிலளித்து கொண்டிருப்பவர்கள் அரசின் உண்மையான புள்ளி விவரங்களுக்கு எந்த பதிலும் அளிப்பதில்லை என்றும் கூறினார் 
அப்போது சில எம்பிக்கள் ஹிந்தியில் மறுப்பு தெரிவித்து குரல் எழுப்பியபோது ஆவேசமடைந்த கார்த்திக் சிதம்பரம் ’நீ என்ன பேசுறேன்னு எனக்கு புரியல’ என்று தமிழில் கூலாக சொல்லிவிட்டு தனது பேச்சை தொடர்ந்தார். இதனால் மக்களவையில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது