கமல்ஹாசன் இதை செய்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்: கார்த்திக் சிதம்பரம்

chidambaram
கமல்ஹாசன் இதை செய்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்
siva| Last Updated: ஞாயிறு, 17 ஜனவரி 2021 (13:37 IST)
தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன

கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கி விட்டன என்பதும் குறிப்பாக இந்த தேர்தலில் புதிதாக களமிறங்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு பொது மக்களிடையே மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வந்தாலும் அந்தக் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா என்பது குறித்து சந்தேகத்துடன் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்பி கார்த்திக் சிதம்பரம் அவர்கள் கமல்ஹாசன் அரசியல் குறித்து கூறுகையில் ’காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே கமல்ஹாசன் ஜெயிக்க முடியும் என்றும் இதனை அவர் செய்வார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார்

இதுவரை கமலஹாசன் எந்த கட்சி உடனும் கூட்டணி குறித்து பேசவில்லை என்பதும் இனி வரும் நாட்களில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து பேசுவாரா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்


இதில் மேலும் படிக்கவும் :