திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 2 மார்ச் 2023 (08:33 IST)

இன்று 1 முதல் 10ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை: என்ன காரணம்?

holiday
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதியில் உலகப் புகழ்பெற்ற மஸ்தான் சாகிப் தர்கா தந்தூரி விழா இன்று நடைபெறுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு இன்று பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தான் மாணவர்களுக்கு விடுமுறை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது செய்முறை தேர்வு நடைபெற்று வருவதை அடுத்து செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது அடுத்து மாணவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
 
இன்றைய விடுமுறையை ஈடுகட்ட மற்றொரு நாள் பள்ளி இயங்கும் என்றும், அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva