ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (08:58 IST)

குமரியில் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை நிறுத்தம்.. என்ன காரணம்?

Kanyakumari
கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரியில் நேற்று திடீரென கடல் மட்டம் தாழ்வாக இருப்பதால் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு படகு சேவை செய்தால் படகு தரை தட்டி விடும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டது.

இதனை அடுத்து விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு பிறகு கடலின் தன்மையை பொறுத்து சுற்றுலா படகு சேவை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விவேகானந்தர் பாறைக்கு திடீரென படகு சேவை நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இருப்பினும் நிலைமை விரைவில் சரியாகி படகு போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva