திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (08:30 IST)

கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டம் தாழ்வு.. விவேகானந்தர் பாறைக்கு படகு சேவை ரத்தா?

Kanyakumari
கன்னியாகுமரியில் திடீரென கடல் மட்டம் தாழ்வானதை அடுத்து விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

திருச்செந்தூர் மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதியில் திடீரென கடல் மட்டம் தாழ்வடைவதும் கடல் உள்வாங்குவதுமான நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

நேற்று கூட திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதாக கூறப்பட்ட நிலையில் இன்று காலை திடீரென கன்னியாகுமரி கடலில் நீர்மட்டம் தாழ்வாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக இன்று காலை 7.45 மணிக்கு தொடங்க வேண்டிய சுற்றுலா படகு சேவை தாமதமாகி வருகிறது. மேலும் படகு சவாரி செய்ய ஆவலுடன் வந்த சுற்றுலா பயணிகள் காத்திருக்கின்றனர்.

கடலின் தன்மையை பொறுத்து காலை 10 மணிக்கு மேல் சுற்றுலா படகு சேவை ஆரம்பிக்கபடும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்,

Edited by Siva