செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: புதன், 20 நவம்பர் 2019 (09:31 IST)

காஞ்சிக்கு மேலும் ஒரு பெருமை.. பெண் நெசவாளருக்கு தேசிய விருது

காஞ்சிபுரம் பெண் நெசவாளருக்கு சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல், மத்திய கைத்தறி மற்றும் துணிநூல் துறை, தேசிய அளவில் சிறந்த நெசவாளர்களுக்கு தேசிய விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்நிலையில் இந்திய அளவில் சிறந்த கைத்தறி விருதுக்கு தேர்வான, 11 பேரில் தமிழகம் காஞ்சிபுரத்தை சேர்ந்த கீதா என்ற பெண் நெசவாளியும் இடம்பெற்றுள்ளார்.

கோர்வை ரக பட்டு சேலை நெசவுக்காக கீதாவுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது, அதிகமான மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய கோர்வை ரக பட்டு சேலை காஞ்சிபுரத்தில் மிகவும் அரிதாகவே கிடைக்கும். இந்த சேலை 30 ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்புடையது என்பது கூடுதல் தகவல்.