வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஜனவரி 2018 (19:39 IST)

எச்.ராஜா ஒரு இழுக்கு; பாஜகவை வீழ்த்த அவரே போதும்: விட்டு விளாசிய கனிமொழி!

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சைக்கு பெயர் போனவர். அவரது ஒவ்வொரு கருத்துமே அதிரடியாக இருக்கும். இதனால் அவரை சுற்றி எப்பவுமே பரபரப்பாக இருக்கும். இந்நிலையில் பாஜகவை வீழ்த்த அவரே போதும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.
 
பாஜகவின் எச்.ராஜா ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு எதிராக கடும் எதிர்ப்பு தெரிவித்து அவரை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து சர்ச்சைக்கு வித்திட்டார். திருமாவளவனை கடுமையாக விமர்சித்து நானும் ரவுடி தான் என கூறினார். நாத்திகர் மாநாட்டில் பேசிய திமுகவின் கனிமொழியை அவதூறாக பேசினார்.
 
இவ்வாறு தொடர்ந்து சர்ச்சைக்குறிய வகையிலேயே பேசிவரும் எச்.ராஜா குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியிடம் கேட்கப்பட்டது. இதற்கு சென்னை விமான நிலையத்தில் பதிலளித்த அவர், எச்.ராஜா விமர்சனங்களை தரக்குறைவான முறையில் எடுத்து வைப்பவர். அவரது விமர்சனங்களுக்கு பதிலளிப்பதே இழுக்கு என கூறினார்.
 
மேலும் எச்.ராஜா பாஜகவுக்கும், இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் இழுக்கு. எச்.ராஜா இருக்கும் வரை பாஜக மேலும் வளராது, பாஜகவை வீழ்த்த அவர் ஒருவரே போதும் என கனிமொழி கூறினார்.