1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (17:47 IST)

பெண்கள் அரசியல் பேசுங்கள். அரசியல் தெரிந்து கொள்ளுங்கள்: கனிமொழி எம்.பி.

Kanimozhi
பெண்கள் அரசியல் பேச வேண்டும் என்றும் பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்
 
சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடந்த விழாவில் பேசிய கனிமொழி எம்பி அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பெண்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் வேண்டும் என்றும் பெண்கள் அரசியலில் தற்போது அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் பெண்களுக்கு பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று நீண்ட காலமாக இந்த கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது என்றும் ஆனால் இதனை மசோதாவாக தாக்கல் செய்ய பாஜக அரசு ஏன் தயங்குகிறது என்று தெரியவில்லை என்றும் கூறினார் 
 
இதுகுறித்து பலமுறை தான் பாராளுமன்றத்தில் பேசிய போதிலும் இந்த மசோதா பரிசீலனையில் இருப்பதாக பாஜக பதில் கூறி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்