திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (08:02 IST)

ரேஷன் கார்டு இருக்கும் மகளிர்களுக்கு உரிமைத்தொகை கிடைக்குமா..? கனிமொழியிடம் கேள்வி கேட்ட பெண்கள்

ரேஷன் கார்டு வைத்திருக்கும் மகளிர்கள் அனைவருக்கும் உரிமை தொகை கிடைக்குமா என திமுக எம்பி கனிமொழியுடன் பெண்கள் சரமாரியாக கேள்வி கேட்டதால் அவர் அதிர்ச்சி அடைந்தார். 
 
திமுக எம்பி கனிமொழி நேற்று தனது சொந்த தொகுதியான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.  இந்த நிலையில் பெண்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் மகளிர் உரிமை தொகை வரும் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது என்று கனிமொழி தெரிவித்தார். 
 
அப்போது அந்த கூட்டத்திற்கு வந்து இந்த பெண்கள் கனிமொழியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். தகுதி உள்ள பெண்களுக்கு மட்டும் தான் உரிமை தொகை என்றும் ரேஷன் கார்டு இருக்குமா எல்லோருக்கும் உரிமை தொகை கிடைக்குமா என்றும் கேள்வி கேட்டனர். 
 
அப்போது கனிமொழி எம்பி அந்த பெண்களிடம் தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் என்று தெரிவித்தார்.
 
Edited by Siva