வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 19 நவம்பர் 2021 (16:20 IST)

நாளையும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: ஆட்சி தலைவர் அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன என்பதையும் நேற்று முன்தினம் 20 மாவட்டங்களுக்கும் நேற்று கிட்டதட்ட 26 மாவட்டங்களுக்கும் மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றும் பல பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில் ஒருசில மாவட்டங்களில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
 
இந்த நிலையில் சற்று முன்னர் நாளையும் பள்ளிகள் விடுமுறை என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை கனமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்