ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (16:07 IST)

கனகராஜ் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கிடையாது, சசிகலாவின் டிரைவர்: எடப்பாடி பழனிசாமி

நேற்று  ஜெயலலிதாவின் டிரைவர் என்று கூறப்படும் கனகராஜ்  அதிரடி பேட்டி அளித்த நிலையில் இன்று அந்த பேட்டி குறித்து எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்துள்ளார். 
 
 நில அபகரிப்பு வழக்கில் சிறை சென்று ஜாமினில் வெளியே வந்தவர் தான் தனபால் என்றும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் என்னை சம்பந்தப்படுத்தி பேசுவது தவறான விஷயம் என்றும் தெரிவித்தார். 
 
யார் வேண்டுமானாலும் ரோட்டில் இன்று பேசுவார்கள், பேசுவது சரியா தவறா என்பதை பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார். கனகராஜ் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கிடையாது என்றும் சசிகலாவுக்கு தான் அவர் கார் டிரைவராக இருந்தார் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.  
 
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை சம்பந்தப்படுத்தி கனகராஜ் பேசிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran