எம்ஜிஆரின் “காலத்தை வென்றவன்” – பிறந்தநாளில் ரிலீஸ் செய்த கமல்ஹாசன்!

Kamal MGR
Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 17 ஜனவரி 2021 (13:28 IST)
இன்று தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் ‘காலத்தை வென்றவன்’ என்ற எம்ஜிஆரின் ஆவணப்படத்தை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

அதிமுக கட்சியை நிறுவியவரும், முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்ஜிஆரின் 104வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுகவினர் அவரது பிறந்தநாளையொட்டி இனிப்புகள் வழங்கி சிறப்பித்த நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எம்ஜிஆர் குறித்து ‘காலத்தை வென்றவன்’ என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை யூட்யூபில் வெளியிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “பொறு, கொஞ்சம் விளையாடிவிட்டு வருகிறேன்’ என்று காலத்தோடு மோதியவர் என் அண்ணன் எம்ஜியார். அமெரிக்க சிகிச்சை முடிந்து அதிக ஆற்றலோடு திரும்பி, அவர் அரியணை ஏறிய வரலாற்றைச் சொல்கிறது ‘காலத்தை வென்றவன்’ அந்தப் படத்தை இங்கே வெளியிடுகிறேன். வாழ்க்கையில் வெல்ல நீங்களும் பார்ப்பீர்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.
சமீப காலமாக தன்னை எம்ஜிஆரின் அடையாளமாக தொடர்ந்து முன்னிறுத்தி வரும் கமல்ஹாசன் தற்போது இந்த ஆவணப்படத்தை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :