சமூக நீதியை சாத்தியமாக்கியவர் அவர்! – கமல்ஹாசன் ட்வீட்
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளான இன்று அவரது பணிகள் குறித்து புகழ்ந்து கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஊரடங்கை பின்பற்றி கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாடுமாறு மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் கருணாநிதியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். அந்த பதிவில் “பகுத்தறிவை எழுத்தில் பேசி, செந்தமிழில் பெயர் சூட்டல் தொடங்கி, பேருந்தில் திருக்குறள் வரை தமிழ் ஊட்டிய அரசியல் அறிஞர் கலைஞர் அவர்களை இந்நாளில் நினைவு கூர்கிறேன். சமூக நீதியையும் வளர்ச்சியையும் தன்னால் இயன்றவரை சாத்தியமாக்கிய அரசியல் ஆளுமை அவர்.” என்று கூறியுள்ளார்.