புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 29 மார்ச் 2021 (13:04 IST)

கமலிடம் இருப்பது கிறிஸ்துவ பணம்: சரத்குமார் வேற மாட்டிகிட்டார்: ராதாரவி

கமல்ஹாசனிடம் இருப்பது கிறிஸ்தவ பணம் என்றும் சரத்குமார் தேவையில்லாமல் அவரிடம் மாட்டிக் கொண்டார் என்றும் புதுவையில் தேர்தல் பிரசார ஒன்றில் நடிகர் ராதாரவி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நடிகர் ராதாரவி சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இதனை அடுத்து அவர் தமிழகம் மற்றும் புதுவையில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் புதுவையில் நேற்று அவர் தேர்தல் பிரசாரம் செய்தபோது கமலஹாசன் கூட கட்சி ஆரம்பித்து விட்டார், முத்தக்காட்சியை இந்த தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்திய பெருமை கமலுக்கே சேரும்.
 
எத்தனையோ தயாரிப்பாளர்கள் அவர் நடக்க விட்டார். ஆனால் இன்று கோவையில் தெரு தெருவாக ஓட்டுக்காக நடக்கிறார். கமலிடம் இருப்பது கிறிஸ்துவ பணம். நம்ம சரத்குமார் தேவையில்லாமல் அவரிடம் மாட்டிக் கொண்டு விட்டார் என்று கூறினார்
 
மேலும் புதுச்சேரி தனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் இங்கு தண்ணி அடித்தால் எல்லோரும் அமைதியாக போவார்கள் என்றும் இங்கு பிரெஞ்சுக்காரர்கள் ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்திருக்கின்றார்கள் என்றும் பிரிட்டிஷ்காரன் அதை தமிழ்நாட்டில் கற்றுத் தரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்