செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 24 டிசம்பர் 2023 (11:26 IST)

இன்று பெரியார், எம்ஜிஆர் நினைவு தினம்.. கமல்ஹாசனின் நினைவு கூறும் பதிவு..!

இன்று அதாவது டிசம்பர் 24ஆம் தேதி தந்தை பெரியார் மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆகியோர்களது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
 
அதிமுகவினர் எம்ஜிஆர் சமாதிக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் அதேபோல் திமுகவினர் பெரியார் நினைவு இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசன்  பெரியார் மற்றும் எம்ஜிஆர் நினைவு தினம் குறித்து தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
 
பேதம் பார்ப்போருக்கும், பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பித்துப் பிழைப்போர்க்கும், ஆணெனப் பெண்ணென ஆதிக்கம் செலுத்துவோருக்கும் இன்றைக்கும் சிங்கக் கனவாக இருக்கும் தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று அவர்தம் சிந்தனையையும் உரைகளையும் எழுத்துகளையும் முன்னெடுக்க உறுதி எடுப்போம். அவரது வீச்சு குறையாமல் இருக்க நம்மாலான பங்கை நல்குவோம்.
 
மரணத்தால் வெல்ல முடியாத மகத்தான மனிதர் மக்கள் திலகம் எம்ஜிஆர். அனைவரது நினைவுகளிலும் இன்றும் வாழும் பெருந்தகையாளரான அவரது நினைவு நாளில் கலைத்துறையிலும் அரசியலிலும் அவர் செய்த சாதனைகளை நினைவு கூர்வோம்.
 
 
Edited by Siva